செய்திகள்

தோட்ட நிர்வாகத்திற்கு எதிராக தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்

லிந்துலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மவுசாஎல்லை கீழ் பிரிவில் 150 இற்கு மேற்பட்ட தோட்ட தொழிலாளர்கள் 03.03.2016 அன்று மாலை 04 மணிக்கு தோட்ட தேயிலை தொழிற்சாலைக்கு முன்பாக ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

 தோட்ட நிர்வாகத்தால் தொழிலாளர்களுக்கு வழங்கவேண்டிய சலுகைகளை வழங்கவில்லை எனவும் பெண் தொழிலாளர்களை மிகவும் மோசமான நிலையில் நடத்துவதாகவும் பெண்களுக்கு விடுமுறை வழங்கபடவில்லையென தெரிவித்து ஆர்பாட்டத்தில் ஈடுபட்டதாக தொழிலாளர்கள் தெரிவிக்கின்றனர்.

 தோட்டத்தில் அடிப்படை சுகாதார விடயங்களை செய்து  கொடுக்காமல் இவ்விடயத்தினை தோட்ட நிர்வாகம் தட்டிகழிப்பதாகவும் இதனால் பல சிரமங்களை எதிர்நோக்குவதாகவும்  இவர்கள் தெரிவிக்கின்றனர்.

 தொழிலாளர்களின் பிரச்சினைகளை தீர்ப்பதற்கு தோட்ட அதிகாரிகளிடம் கலந்துரையாட அனுமதி கோரியபோதிலும் இதற்கான நேரத்தினை ஒதுக்கிக்கொடுக்க அதிகாரிகள் இணக்கம் தெரிவிப்பதில்லை என ஆர்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் தெரிவித்தனர்.

 இவ்வார்ப்பாட்டம் சுமார் இரண்டு மணி நேரம் இடம்பெற்றமை குறிப்பிடதக்கது.

n10