செய்திகள்
முக்கிய சந்தேக நபர்களுக்கு விசேட பாதுகாப்பை வழங்க சிறைச்சாலைகள் திணைக்களம் தீர்மானம்
பாரியளவிலான குற்றச்செயல்களுடன் தொடர்புடைய சந்தேக நபர்களுக்கு விசேட பாதுகாப்புகளை வழங்குவதற்கு சிறைச்சாலைகள் திணைக்களம் தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
நேற்று முன்தினம் தெமட்டகொட பகுதியில் சிறைச்சாலை பஸ்சொன்றின் மீது துப்பாக்கி சூடு நடத்தப்பட்ட சம்பவத்தை தொடர்ந்து சிறைச்சாலைகள் திணைக்களம் இந்த தீர்மானத்தை மேற்கொண்டுள்ளது.
இதன்படி பாரியளவிலான குற்றச் செயல்களுடன் தொடர்புடைய மற்றும் முக்கிய சந்தேக நபர்களை சிறைச்சாலையிலிருந்து நீதிமன்றங்களுக்கு கொண்டு செல்லும் போது விசேட பாதுகாப்பை வழங்குவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.
n10




