வெள்ளவத்தையில் கைதான இந்தியர்கள் தொடர்பாக முக்கிய தகவல்கள் வெளியாகின…….!
வெள்ளவத்தை பகுதியில் நேற்று கைது செய்யப்பட்ட இந்தியர்கள் தமது சிறுநீரகத்தை 5 இலட்சம் ரூபாவுக்கு விற்பனை செய்துள்ளதாக விசாரணைகளின் போது தெரிய வந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
வெள்ளவத்தை பகுதியில் வீசாக்காலம் முடிவடைந்த நிலையில் தங்கியிருந்த 8 இந்தியர்கள் நேற்று கைது செய்யப்பட்டிருந்தனர். இவர்கள் கைது செய்யப்பட்ட போது உடல் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்ட போது அவர்களின் உடலில் சிறுநீரகம் அகற்றப்பட்டமைக்கான அடையாளங்கள் காணப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது.
இதன்படி இந்த விடயம் தொடர்பாக விசாரணை நடத்திய போது அவர்கள் தமது சிறுநீரகமொன்றை 5 இலட்சம் ரூபாவுக்கு விற்றுள்ளதாக தெரிய வந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இது தொடர்பாக தொடர்ந்தும் அவர்களிடம் விசாரணைகள் நடத்தப்படுகின்றது.




