பத்தேகமயிலும் சூடு; ஒருவர் படுகாயம்
காலி, பத்தேகம பகுதியில் நேற்று வெள்ளிக்கிழமை (04) இரவு இனந்தெரியாத நபர்களால் நடத்தப்பட்ட துப்பாக்கிப் பிரயோகத்தில், 49 வயதான நபரொருவர் படுகாயமடைந்து காலி கராப்பிட்டிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
படுகாயமடைந்தவர் ஹிக்கடுவ பிரதேசத்தைச் சேர்ந்த ரி.ராஜ் குமார எனவும் மோட்டார் சைக்கிளில வந்த இனந்தெரியாத இருவரே இந்தத் துப்பாக்கிப் பிரயோகத்தை நடத்திவிட்டுத் தப்பிச் சென்றுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகத் தெரிவித்த பொலிஸார், சந்தேகநபர்கள் அடையாளம் காணப்படவில்லையெனவும் தெரிவித்தனர்.




