நளினிக்கு பிரியங்கா மிரட்டல்: அப்போதைய முதல்வர் கருணாநிதி விளக்கம் தரவேண்டும்! வைகோ
தனது தந்தையாரின் இறுதிச்சடங்கில் கலந்துகொள்ள சமீபத்தில் பரோலில் வெளிவந்தார் ராஜீவ் கொலைவழக்கில் சிறைத்தண்டனை அனுபவித்து வரும் நளினி. அப்போது ஜூனியர் விகடனுக்கு பிரத்யேக பேட்டி அளித்தார்.
பிரியங்கா காந்தி உங்களை சந்தித்தபோது என்ன பேசினார்? என்ற கேள்விக்கு பதிலளித்த நளினி, “அதை இப்போது முழுமையாக சொல்ல முடியாது. ஆனால் அவர் என்னிடம் மிரட்டல் தொனியில் பேசினார்.
பேசி முடித்தபின் அங்கிருந்து கிளம்பிய போது அங்கிருந்த அதிகாரிகளிடம் எனக்கு எந்த வசதிகளும் செய்துதரக் கூடாது என சொல்லிவிட்டு சென்றார் எனக் கூறியிருந்தார்.
இந்நிலையில் சிறையில் நளினியை பிரியங்காக மிரட்டிய விவகாரம் விஸ்வரூமெடுத்திருக்கிறது.
மதிமுக பொதுச்செயலார் வைகோ, திருவண்ணாமலையில் நடந்த மக்கள் நலக்கூட்டணியின் பிரச்சாரக் கூட்டத்தில் கலந்து கொண்டார். அப்போது அவர்,
ராஜீவ்காந்தி கொலை வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்டு 25 ஆண்டுகளாக சிறைத் தண்டனை அனுபவித்து வரும் 7 தமிழர்களை விடுவிக்கப் போவதாகக் கூறி ஜெயலலிதா பித்தலாட்டம் போடுகிறார்.
சிறையில் உள்ள நளினியை சந்தித்த பிரியங்கா காந்தி மிரட்டி உள்ளார் என்று செய்தி வெளியாகி உள்ளது. அவருக்கு எந்த வசதிகளையும் செய்து கொடுக்கக்கூடாது என்று எச்சரித்துள்ளார். சிறையில் உள்ள பெண்ணை எப்படி மிரட்டலாம்?” என கேள்வி எழுப்பினார்.
தொடர்ந்து இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய வைகோ, “பொதுவாக சிறையில் உள்ள கைதிகளை சந்திக்க பல கட்டுப்பாடுகள் உள்ளன. யார் ஒருவரும் சிறை பதிவேடுகளில் கையெழுத்திடாமல் கைதிகளை சந்திக்க முடியாது.
அப்படி இருக்கையில் பிரியங்கா எந்த ஆதாரங்களுமின்றி நளினியை எப்படி சந்தித்தார் என்பதை விளக்கவேண்டும்.
அந்த சந்திப்பு நிகழ்ந்த போது தமிழகத்தில் கருணாநிதிதான் முதல்வர். அவருக்கு தெரியாமல் இப்படி ஒரு சந்திப்பு நடந்திருக்க வாய்ப்பில்லை. இந்த சந்திப்புக்கு ஏற்பாடு செய்தது
கருணாநிதி தலைமையிலான அரசுதான். இந்த மிரட்டல் குறித்து அவரது பதில் என்ன என்று அவர் விளக்க வேண்டும் என வலியுறுத்தினார்.
n10




