செய்திகள்

படகில் அவுஸ்திரெலியா செல்ல முயற்சித்த 17 பேர் கைது

சட்ட விரோதமான முறையில் கடல் வழியாக அவுஸ்திரெலியாவுக்கு செல்ல முயற்சித்த 17 பேர் அடங்கிய குழுவான்று கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
காலி கடல் பகுதியில் வைத்து இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக கடற்படையினர் தெரிவித்துள்ளனர்.
கடற்படையினரின் புலனாய்வு பிரிவினருக்கு கிடைத்த தகவலுக்கமையவே இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் இவர்களிடையே மூன்று சிறுவர்கள் அடங்குவதாகவும் கடற்படை தெரிவித்துள்ளது.
தற்போது காலி கடற்படை துறைமுகத்திற்கு அழைத்து வரப்பட்டுள்ள இவர்கள் மேலதிக விசாரணைக்காக காலி பொலிஸாரிடம் ஒப்படைக்கப்படவுள்ளனர்.
n10
2