செய்திகள்

கொழும்பு நகரில் பாதுகாப்பு சோதனைகள் அதிகரிப்பு

இலங்கையின் தலைநகரான கொழும்பில் பாதுகாப்பு சோதனைகள் மீண்டும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.

உள்நாட்டுப் போர் காலகட்டத்தில் இருந்ததைப் போல சாலைத் தடைகள், வாகன சோதனைகள் ஆகியவற்றில் காவல்துறையினர் ஈடுபட்டுவருகின்றனர்.

நிழல் உலகக் குழுவினருக்கு இடையிலான மோதல்களால் துப்பாக்கிச்சூடு சம்பவங்கள் அதிகரித்திருப்பதால் நூற்றுக்கும் மேற்பட்ட காவல் நிலையங்கள் இம்மாதிரியான நடவடிக்கைகளில் ஈடுபடும்படி கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளன.

இம்மாதிரியான மோதல்களில் குறைந்தது 3 பேர் கொல்லப்பட்டுள்ளனர். கர்ப்பிணிப் பெண் ஒருவர் உட்பட பலர் காயமடைந்துள்ளனர்.

காவல்துறையினருக்கு உதவும்படி ராணுவத்தைக் கேட்டுக்கொண்டிருப்பதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கூறியிருக்கிறார்.

n10