வெலிக்கடை சூட்டு சம்பவத்துடன் தொடர்புடைய ஒருவர் கைது
வெலிக்கடை சிறைச்சாலைக்கு முன்னால் கடந்த சனிக்கிழமை கர்ப்பிணி பொண்ணொருவர் மீது நடத்தப்பட்ட துப்பாக்கி சூட்டு சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபர் ஒருவர் கொழும்பு குற்றதடுப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
கைக்குண்டொன்றை வைத்திருந்த நிலையில் கைது செய்யப்பட்ட குறித்த சந்தேக நபரிடம் விசாரணை நடத்திய போதே அவர் குறித்த துப்பாக்கி சூட்டு சம்பவத்துடன் தொடர்புபட்டிருந்தமை தெரியவந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
26 வயதுடைய நபரொருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார். இவரிடமிருந்து கைக்குண்டுடன் 5 கையடக்க தொலைபேசிகளும் மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.




