வடமராட்சி கிழக்கில் கடல் நீரை நன்னீராக்கும் திட்டம்: இரு வாரங்களுக்குள் இறுதி முடிவு
வடமராட்சி கிழக்கு மருதங்கேணியில் நடைமுறைப்படுத்தத் திட்டமிட்டுள்ள கடல் நீரை நன்னீராக்கும் திட்டம் தொடர் பாக இரண்டு வாரங்களுக்குள் இறுதி முடிவு எடுக்கப்படும் என பலத்த வாதப் பிரதிவாதங்கள், அமளி துமளிக்கு மத்தியில் வடமராட்சி கிழக்கு ஒருங்கிணைப்புக் குழுவில் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இலங்கைத் தமிழரசுக் கட்சித் தலை வரும் யாழ்.மாவட்ட பாராளுமன்ற உறுப் பினருமான மாவை சேனாதிராசா தலை மையில் இக் கூட்டம் இடம்பெற்றது. ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தின் ஏனைய இணைத் தலைவர்களான இரா ஜாங்க அமைச்சர் திருமதி விஜயகலா மகேஸ்வரன், யாழ்.மாவட்ட நியமன பாரா ளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராம நாதன், முதலமைச்சர் சி.வி.விக்கினேஸ் வரன் ஆகியோர் கலந்துகொள்ளாமையி னால் மாவை சேனாதிராசா எம்.பி.யே கூட் டத்திற்குத் தலைமை வகித்தார். முதல மைச்சரின் பிரதிநிதியாக மாகாண சபை உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் பங்கு பற்றிய போதிலும் அவர் மாகாண சபை உறுப்பினர்களுக்கு ஒதுக்கப்பட்ட ஆசனத்தி லேயே அமர்ந்திருந்தார்.
அத்துடன் யாழ். மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்களான எம்.ஏ.சுமந்திரன், சிவ ஞானம் ஸ்ரீதரன் ஆகியோரோடு ஏனைய மாகாண சபை உறுப்பினர்களான அ.பரஞ் சோதி, வே.சிவயோகம் ச.சுகிர்தன், கே.தர்மலிங்கம், எதிரணியான சுதந்திரக் கட்சி மாகாண சபை உறுப்பினர்கள் எஸ். அகிலதாஸ் ஆகியோரும் கலந்து கொண்டனர். ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் சுமார் ஒரு மணி நேரத்துக்கு மேலாக மிகச் சுமுகமாக இடம்பெற்றுக் கொண்டிருக்கையில் கமநல சேவைகள் திணைக்கள விவசாய நடவடிக்கைகள் தொடர்பாக ஆராயப்பட்டதும் அங்கு சமுக மளித்திருந்த வடமராட்சி கிழக்கு கடற் தொழிலாளர் கூட்டுறவுச் சங்கங்களின் பிரதிநிதிகள் எழுந்து வடமராட்சி கிழக்கில் கடற்றொழிலும் விவசாயமும் இரண்டு கண்களைப் போன்றது. அப்படியிருக்க கூட்ட நிகழ்ச்சி நிரலில் விவசாயம் பற்றிக் குறிப்பிடப்பட்டுள்ளது.
கடற்றொழிலைப் பற்றி எதுவுமே குறிப்பிடப்படவில்லை. நன்னீர் திட்டத்துக்கு வடமராட்சி கிழக்கு மீனவர் சமூகம் எதிர்ப்புத் தெரிவித்து வருவதனால் அதற்கு வஞ்சம் தீர்ப்பதற்காக கடற்றொழிலை குறிப்பிடவில்லை என்ற சார்பில் கருத்துரைத்தனர். இது தொடர் பாக பல பிரதிநிதிகளும் ஒரே சமயத்தில் ஆக்ரோஷத்துடன் கேள்விகளை தொடுத் ததால் பெரும் அமளி துமளி நிலவியது. இந் நிலையில் பெரும் சிரமத்துக்கு மத்தியில் தலைமைதாங்கிய மாவை சேனாதிராசா தவறுதலாக நடந்துவிட்டது. நிகழ்ச்சி நிரல் பிரசுரத்தில் இல்லாத போதிலும் அடுத்து அதனை ஆராயவே மேல் தலை றொயி (தவ நெட் புரொஜெக்டர்) விபரம் காட் டப்படுவதாகச் சுட்டிக்காட்டினார்.
தொடர்ந்து மீனவர்கள் தமது தொழில் சார்ந்த பிரச்சினைகளை விடுத்து மரு தங்கேணி நன்னீர் திட்டம் நிறுத்தப்பட வேண்டும் என வாதிட்டார்கள். கூடவே வடமராட்சி கிழக்கு பட்டப்படிப்பு மாணவர் ஒன்றியம் நன்னீர்த் திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டால் ஏற்படும் விளைவுகளை விபரமாக எடுத்துக் கூறி னார்கள். இது தொடர்பாக மீனவர்கள் தொடுத்த சரமாரியான கேள்விகளுக்கு பாராளுமன்ற உறுப்பினர்களான மாவை சேனாதிராசா, எம்.ஏ. சுமந்திரன், மாகாண சபை உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் ஆகியோர் மாறிமாறி விளக்கங்களைக் கொடுத்தனர்.
மக்களின் விருப்பம் இன்றி இத்திட்டத்தை நடைமுறைப்படுத்த மாட்டோம். இது தொடர்பாக ஆராய்வோம். ஆய்வுகள் மூலம் இத்திட்டத்தினால் பாதிப்பு ஏற் படுமானால் அதனை நிறுத்துவோம். என சுமந்திரன் எம்.பி. தெரிவித்த போதும் மீனவர் பிரதிநிதிகள் விடாப் பிடியாக இதற்கு ஒரு முடிவு வேண்டும் எப்போது எனச் சொல்லுங்கள். இதனைத் தள்ளிப் போட வேண்டாம் என மீண்டும் மீண்டும் எடுத்துக் கூறியதை அடுத்து இன்னமும் இரண்டு வாரங்களுக்குள் இது தொடர்பாகத் தீர்மானம் எடுக்கப்படும். அது தொடர்பாக இடம்பெறும் கூட்டத்திற்கு மீனவர் பிரதிநிதிகளுக்கும் அழைப்பு விடுக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டது. இப்பிரச்சினைக்கு முடிவு கட்டப்பட்டது. கூட்டம் தொடர்ந்து இடம்பெற்றது.
நன்னீர்த் திட்டம் தொடர்பாக மீனவர் பிரதிநிதிகளுக்கும் கூட்டத் தலைமைக்கும் இடையே வாதப், பிரதிவாதங்கள் இடம் பெற்றபோது அவ்விடயத்தில் கூட்டத்தில் சமுகமளித்திருந்த பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.ஸ்ரீதரன் எவ்வித கருத்தையும் வெளி யிடாது அனைத்தையும் அமைதியாக அவதானித்துக் கொண்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
R-06




