செய்திகள்

கொழும்பு துறைமுக நகர திட்டம் தொடர்பான ஒப்பந்தம் 6 மாதங்களால் நீடிக்கப்பட்டது

கொழும்பு துறைமுக நகர திட்டம் தொடர்பாக சீன நிறுவனத்துடன் ஏற்படுத்திக்கொண்டுள்ள ஒப்பந்தத்தை மேலும் 6 மாதங்களால் நீடிப்பதற்கு அரசாங்கம் நடவடிக்கையெடுத்துள்ளது.
இதன்படி பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவினால் அமைச்சரவைக்கு சமர்ப்பித்த அமைச்சரவை பத்திரத்திற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
துறைமுக நகர வேலைத்திட்டம் தொடர்பாக எழுந்த சூழலியல் பிரச்சினைகள் காரணமாக அந்த  வேலைத்திட்டம் தொடர்பான நடவடிக்கைகள் 2015 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் முதல் இடைநிறுத்தப்பட்டன. பின்னர் அது தொடர்பான முறையான மற்றும் முழுமையான சூழல் பிரச்சினைகள் அறிக்கை அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டது.
அவ்வறிக்கையின் பிரகாரமும் மற்றும் சில நிபந்தனைகளின் அடிப்படையிலும் அத்துடன் திருத்தி கொள்ள வேண்டிய அம்சங்களுக்கிணங்கவும் அதனை மீள ஆரம்பிக்க பொருளாதார முகாமைத்துவம் தொடர்பான அமைச்சரவை நிலையியல் குழுவினால்  சிபார்சு செய்யப்படடிருந்தது.  அதனடிப்படையில் குறித்த குறித்த கம்பனிக்கும் இலங்கை அரசாங்கத்துக்கும் இடையில் மேற் கொள்ளப்பட்டுள்ள ஒப்பந்தத்தை 2016 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 15 ஆம் திகதி முதல் மேலும் ஆறு மாதத்துக்கு நீடிப்பதற்கு பிரதமர் ரணில் விக்ரமசிங்கவனால்  முன்வைக்கப்பட்ட யோசனைகளுக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
n10