விருது கிடைக்காததில் வருத்தம் இல்லை – மடோனா செபாஸ்டின்
மலையாளத்தில் வெளிவந்த ‘பிரேமம்’ படத்தில் அறிமுகமானவர் மடோனா செபாஸ்டின். ‘காதலும் கடந்து போகும்’ படம் மூலம் தமிழுக்கு அறிமுகமாகி உள்ளார்.
இதில் அவர் விஜய் சேதுபதி ஜோடியாக நடித்துள்ளார். சமீபத்தில் கேரள அரசின் திரைப்பட விருதுகள் அறிவிக்கப்பட்டது. அதில் ‘பிரேமம்’ படத்திற்கு ஒரு விருதுகூட கிடைக்கவில்லை.
இது அங்கு சர்ச்சையை ஏற்படுத்தியது. இதுபற்றி மடோனா கூறியதாவது: ‘பிரேமம்‘ படத்துக்கு விருது கிடைக்கும் என்று உறுதியாக எதிர்பார்த்தேன்
. இயக்குனருக்கு கண்டிப்பாக கிடைக்கும் என்று நினைத்தேன். கிடைக்காதது பற்றி வருத்தம் இல்லை. விருதுக்கான விதிமுறைககள் பற்றி எனக்குத் தெரியாது. கேரள மக்கள் படத்தை கொண்டாடினார்கள்.
தமிழிலும் படம் ஹிட்டாகி உள்ளது. அதுதான் படத்துக்கு கிடைத்த பெரிய விருது. விருது பெற வேண்டும் என்பதற்காக யாரும் படம் நடிப்பதுமில்லை, இயக்குவதுமில்லை.
டிகாப்ரிேயா எத்தனையோ முறை ஆஸ்கருக்கு நாமினேஷன் செய்யப்பட்டும் விருது பெறாமல் திரும்பியிருக்கிறார். அவருக்கு இப்போதுதான் விருது கிடைத்திருக்கிறது. நம் வேலையை சரியாகச் செய்து கொண்டு போனால் விருது வரும் போது கிடைக்கும்.
N5




