ஒன்றிணைந்த எதிர்க்கட்சியினரின் கூட்டத்தில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷ கலந்துக்கொண்டார்.
குறித்த கூட்டம் கொழும்பு ஹைட்பார்க் மைதானத்தில் நடைபெற்ற நிலையில் அந்த கூட்ட மேடையில் மஹிந்த ராஜபக்‌ஷ ஏறிய போதும் அங்கிருந்த அவரின் ஆதரவாளர்களினால் பெரும் ஆரவார கோஷங்கள் எழுப்பப்பட்டது.
இதேவேளை இந்த கூட்டம் காரணமாக அந்த பகுதியில் சில வீதிகள் மூடப்பட்டதுடன் இதனால் கடும் வாகன நெரிசலும் ஏற்பட்டிருந்தது.
இந்த கூட்டத்தில் சமல் ராஜபக்‌ஷ , குமாரவெல்கம , மஹிந்தானந்த அலுத்கமகே , பவித்திரா வன்னியாராச்சி , சீ.பி.ரட்நாயக்க , ஜீ.எல்.பீரிஸ் , பந்துல குணவர்தன , டலஸ் அழகப்பெரும் , காமினி லொகுகே உள்ளிட்ட ஶ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி உறுப்பினர்கள் பலரும் மற்றும் தினேஸ் குணவர்தன , விமல்வீரவன்ச , உதயகம்மன்பில ஆகியோரும் கலந்துக்கொண்டிருந்தனர்.
 எவ்வாறாயினும் இந்த கூட்டத்தில் கலந்துக்கொள்ளும் ஶ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி உறுப்பினர்களுக்கு எதிராக நடவடிக்கையெடுக்கப்படுமன கட்சி செயலாளரினால் அறிவிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.