செய்திகள்
ஜீ 7 மாநாட்டில் கலந்துக்கொள்ளுமாறு ஜனாதிபதி மைத்திரிக்கு அழைப்பு
எதிர்வரும் மே மாதம் ஜப்பானில் ஆரம்பமாகவுள்ள ஜீ 7 பொருளாதார மாநாட்டில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கலந்துக்கொள்ளவுள்ளார்.
இதற்கான அழைப்பு ஜனாதிபதிக்கு கிடைத்துள்ளதாக அரசாங்கம் தெரிவித்துள்ளது.
இந்த மாநாட்டில் இலங்கை ஜனாதிபதியொருவர் கலந்துக்கொள்ளும் முதலாவது சந்தர்ப்பமாக இது அமையவுள்ளதாக சர்வதேச பொருளாதார பிரதி அமைச்சர் சுஜீவ சேனசிங்க தெரிவித்துள்ளார்.
அரசாங்க தகவல் திணைக்களத்தில் நேற்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பொன்றிலேயே பிரதி அமைச்சர் இதனை தெரிவித்துள்ளார்.
n10




