தமிழீழக் கோரிக்கையினை கைவிட்டுள்ளோம், ஏற்றுக்கொள்ளக்கூடிய தீர்வை தாருங்கள்: முஸ்லிம் காங்கிரஸ் தேசிய மாநாட்டில் சம்பந்தன்
நாங்கள் துன்பங்களை துயரங்களை எதிர்நோக்கியது மட்டுமன்றி தமிழீழ கோரிக்கையினையும் கைவிட்டுவந்துள்ளோம். நல்லிணக்கம் ஏற்படவேண்டுமானால் நிரந்தர சமாதானம் ஏற்படவேண்டுமனால் சமத்துவ அடைப்படையில் நடைபெறவேண்டுமானால் தமிழ் மக்களின் கரிசனைகள் கவனத்தில் எடுக்கப்பட்டு தமிழ் பேசும் மக்களின் கரிசனைகள் கவனத்தில் எடுக்கப்படடு மூன்று இனங்களும் ஏற்றுக்கொள்ளக்கூடிய ஒரு அரசியல் தீர்வு அரசியல் சாசனத்தினை வெளியிடவேண்டும் என தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
அம்பாறை மாவட்டத்தின் அக்கரைப்பற்று பாலமுனை பிரதேசத்தில் நடைபெற்ற ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசின் தேசிய மாநாட்டில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
இங்கு தொடர்ந்து உரையாற்றிய அவர்,
ரஹீவுப் ஹக்கீம் பேசும்போசு எல்லைக்கிராமங்களில் பயங்கரவாத நிலையின்போது முஸ்லிம மக்களுக்கும் பெரும்பான்மை மக்களுக்கும் ஏற்பட்ட பிரச்சினைகள் தொடர்பில் உரையாற்றினார். அது உண்மை. அதனை மறுப்பதற்கு இடமில்லை.ஆனால் இந்த நாட்டில் அரசியல் ரீதியான போராட்டத்தினை முன்னெடுத்தவர்கள் தமிழ் மக்கள் என்பதை யாரும் மறுக்கமுடியாது.
இந்த நாட்டில் நாங்கள் ஒன்றாக வாழவேண்டும்.ஒற்றுமையாக வாழவேண்டும்.நாட்டை பிரிப்பதற்கு இடமளிக்கமுடியாது.ஒன்றுபட்ட நாட்டிற்குள் தீர்வினை நாங்கள் காணவேண்டும்.அதற்காக நாங்கள் அனைவரும் ஒத்துழைப்பு வழங்கவேண்டும்.
இந்த நாட்டில் அரசியல் ரீதியான போராட்டத்தினை முன்கொண்டு நடாத்தியவர்கள் தமிழ் மக்கள் என்பதை யாரும் மறுக்கமுடியாது.பலவிதமான அர்ப்பணிப்புகளை மேற்கொண்டுள்ளனர்.
நாடு சுதந்திரமடைந்து இரண்டு மூன்று வருடங்களுக்கு பின்னர் தொடங்கிய போராட்டத்தினை தமிழ் மக்கள் தொடர்ச்சியாக முன்னெடுத்துவருகின்றனர்.
அதிகாரப்பகிர்வினைக்கேட்டது தமிழ் மக்கள்.சிங்கள மக்கள் கேட்கவில்லை,முஸ்லிம் மக்கள் கேட்கவில்லை.தமிழ் மக்களே கேட்டனர்.இதுதான் உண்மை.ஆனால் அதிகாரப்பகிர்வு வரும்போது அனைவருக்கும் அது வழங்கப்படவேண்டும் என்பதை நாங்கள் ஏற்றுக்கொள்கின்றோம்.
ஒரு காலத்தில் நாங்கள் சரிக்கு சமமாக கேட்கேட்டோம்.கேட்பதற்கு எங்களுக்கு உரிமை இருந்தது.நாங்கள் இந்த நாட்டின் சில பகுதிகளை ஆட்சிசெய்துவந்தோம்.எமத ஆட்சியை நாங்கள் அந்நியரிம் இழந்தோம். அந்த ஆட்சி தொடர்பில் சரித்திரங்களில் கூறப்பட்டுள்ளன. அதனை யாரும் மறுக்கமுடியாது.
இந்த நாட்டின் சில பகுதிகள் தமிழர்களின் ஆட்சியில் இருந்தது.ஆனால் இன்று அவற்றினை நாங்கள் கேட்பதில்லை.பிரிக்கப்படாத நாட்டுக்குள் அனைவரும் சமத்துவமாகவும் ஒற்றுமையுடனும் வாழும் நிலையினையினையே நாங்கள் கோருகின்றோம்.
தமிழீழ கோரிக்கையினை நாங்கள் கைவிட்டுள்ளோம்.வெளிநாட்டில் வாழும் எமது புலம்பெயர்ந்த தமிழ் மக்களும் இன்று ஒன்றுபட்ட இலங்கைக்குள் தீர்வைக்காண்பதற்கு தயாராகவுள்ளோம் என்று பகிரங்கமாக கூறக்கூடிய நிலையை நாங்கள் ஏற்படுத்தியுள்ளோம்.
நாங்கள் துன்பங்களை துயரங்களை எதிர்நோக்கியது மட்டுமன்றி தமிழீழ கோரிக்கையினையும் கைவிட்டுவந்துள்ளோம்.நல்லிணக்கம் ஏற்படவேண்டுமானால் நிரந்தர சமாதானம் ஏற்படவேண்டுமனால் சமத்துவ அடைப்படையில் நடைபெறவேண்டுமானால் தமிழ் மக்களின் கரிசனைகள் கவனத்தில் எடுக்கப்பட்டு தமிழ் பேசும் மக்களின் கரிசனைகள் கவனத்தில் எடுக்கப்படடு மூன்று இனங்களும் ஏற்றுக்கொள்ளக்கூடிய ஒரு அரசியல் தீர்வு அரசியல் சாசனம் ஊடாக வரவேண்டும்.இதற்காக அனைவரும் உழைக்கவேண்டும்.
துமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் என்ற வகையில் நாங்கள் நீதியாக செயற்படுவதற்கு தயாராகவிருக்கின்றோம் என்று இந்த இடத்தில் உறுதியாக கூறுகின்றேன்.









