அரசுக்கு எதிரான பொது எதிரணியின் போராட்டத்துக்கு 5 அம்ச உபாயம்: பேராசிரியர் பீரிஸ் அறிவிப்பு
அரசாங்கத்துக்கு எதிரான போராட்டங்களைத் தீவிரப்படுத்தியிருக்கும் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ தலைமையிலான பொது எதிரணி ஐந்து அம்ச உபாயம் ஒன்றுடன் தமது செயற்பாடுகளைத் தீவிரப்படுத்தவுள்ளதாக பொது எதிரணியைச் சேர்ந்த பேராசிரியர் ஜீஎல்.பீரிஸ் தெரிவித்திருக்கின்றார்.
மகிந்த ராஜபக்ஷவின் அலுவலகத்தில் இடம்பெற்ற ஆலோசனைக்கூட்டம் ஒன்றில் இது தொடர்பில் ஆராயப்பட்டு முக்கிய முடிவுகளும் எடுக்கப்பட்டதாகவும் அவர் தெரிவித்தார்.
பொது எதிரணிக்கு ஆதரவான சட்டத்தரணிகள் மத்தியில் கொழும்பில் நேற்று உரையாற்றிய போதே பேராசிரியர் பீரிஸ் இது குறித்த தகவல்களை வெளியிட்டார். சுமார் 250 சட்டத்தரணிகள் இந்தக் கூட்டத்தில் கலந்துகொண்டிருந்தார்கள்.
உள்ளுராட்சிமன்றத் தேர்தல்களை உடனடியாக நடத்துமாறு அரசாங்கத்துக்கு அழுத்தத்தைக் கொடுப்பது பொது எதிரணியின் பிரதான இலக்காக இருக்கும். ஜெனீவா தீர்மானத்தை நடைமுறைப்படுத்தக்கூடாது, இந்தியாவுடனான ETCA உடன்படிக்கையை நடைமுறைப்படுத்தக்கூடாது என்பனவும் பொது எதிரணி முன்னெடுக்கப்போகும் போராட்டங்களில் முக்கிய இடத்தைப் பெற்றுக்கொள்ளும் எனவும் பீரிஸ் தெரிவித்தார்.;
R-06




