செய்திகள்

சம்பிக்கவுக்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணை? கூட்டு எதிரணி திட்டமிடுகின்றது

மேல்மாகாண  மற்றும் பெருநகர அபிவிருத்தி அமைச்சர் பாட்டலி சம்பிக்க ரணவக்கவுக்கு எதிராக பாராளுமன்றத்தில் நம்பிக்கையில்லா பிரேரணையொன்றை கொண்டு வருவதற்கு ஒன்றிணைந்த எதிர்க்கட்சியினர் திட்டமிட்டுள்ளனர்.

எதிர்வரும் பாராளுமன்ற கூட்டத் தொடரின் போது அவருக்கு எதிரான அந்த பிரேரணை கொண்டு வரப்படவுள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் டலஸ்  அழகப்பெரும தெரிவித்துள்ளார்.

பொரளை பகுதியில் இளைஞன் ஒருவன் மீது வானத்தை மோதி விபத்தை ஏற்படுத்தியதாக அமைச்சர் மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டை அடிப்படையாக கொண்டே இந்த பிரேரணை கொண்டு வரப்படவுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

ஒன்றிணைந்த எதிர்க்கட்சியின் குழுக்களின் கூட்டத்தின் போது இது தொடர்பான யோசனையொன்று நிறைவேற்றப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
R-06