செய்திகள்
கோதாபயவுக்கு நீதிமன்றத்தினால் அழைப்பாணை
முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோதபாய ராஜபக்ஷவை எதிர்வரும் மே 3ஆம் திகதி பயங்கரவாத செயற்பாடுகள் தொடர்பான வழக்கு விசாரணைக்காக அமைக்கப்பட்டுள்ள விசேட மேல் நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு அந்த நீதிமன்றத்தின் ஆணையாளர் ஐராங்கனி பெரேராவினால் கோதாபய ராஜபக்ஷவுக்கு அழைப்பாணை விடுக்கப்பட்டுள்ளது.
பாதுகாப்பு செயலாளராக கோதாபாய பணியாற்றிய காலப்பகுதியில் 2006ஆம் ஆண்டில் அவரை கொலை செய்யும் நோக்கில் தற்கொலை குண்டு தாக்குதலை நடத்துவதற்கு விடுதலைப் புலிகள் இயக்கத்திற்கு உதவிகளை வழங்கியதாக குற்றஞ்சாட்டப்பட்டுள்ள 5 பேருக்கு எதிரான வழக்கிற்காக சாட்சியமளிப்பதற்காகவே அவருக்கு அழைப்பாணை விடுக்கப்பட்டுள்ளது.
n10




