செய்திகள்
மஹிந்த புலிகளை காட்டி தப்பியது போல் ரணில் மஹிந்தவை காட்டி தப்ப முயல்கிறார் : ஜே.வி.பி குற்றச்சாட்டு
யுத்தத்தை காரணம் காட்டி மக்களின் பொருளதார பிரச்சினைகளிலிருந்து மஹிந்த ராஜபக்ஷ தப்பித்ததை போல் மஹிந்தவை காட்டி ரணில் தப்பிக்க முயற்சிப்பதாகவும் ஆனால் இதற்கு ஒருபோதும் தமது கட்சி இடமளிக்காது எனவும் ஜே.பி.பி பாராளுமன்ற உறுப்பினர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார்.
இன்று கொழும்பில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பொன்றிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
இன்று நாடு பொருளாதார நெருக்கடிக்குள் தள்ளப்பட்டுள்ளது. அன்று மஹிந்த வாங்கிய பதிவில்லாத கடனே இதற்கு காரணமென காட்டி தப்பிக்க முயற்சிக்கின்றனர். அன்று மஹிந்த ராஜபக்ஷவும் இப்படித்தான் விடுதலைப் புலிகள் இயக்கத்தை ஒழிக்கும் யுத்தம் நடக்கின்றது எனவும் இதனால் பொருளாதாரத்தை கட்டியெழுப்ப முடியவில்லையெனவும் புலிகளை காரணம் காட்டி மக்களின் எதிர்ப்புகளிலிருந்து தப்பித்துக்கொண்டார்.
இப்போது ரணில் ஆட்சியில் மஹிந்தவை காரணம் காட்டி குற்றச்சாட்டுகளிலிருந்து தப்பிக்க முயற்சிக்கின்றனர். இதற்கு நாம் ஒருபோதும் இடமளிக்க மாட்டோம். பொருளாதார பிரச்சினைகளுக்கு மாற்று பொருளாதார முறையையொன்று அவசியமாகும். அப்போதே பிர்ச்சினைகளுக்கு தீர்வுகாண முடியும். என அவர் தெரிவித்துள்ளார்.
n10




