பெரும் விபத்தில் சிக்கிய RJ பாலாஜி: நடந்தது என்ன அதிர்ச்சியில் ரசிகர்கள்?
ரேடியோ ஜாக்கியில் இருந்து வெள்ளித்திரை வந்து கலக்கியவர் RJ பாலாஜி. இவர் சினிமாவில் நடிப்பது மட்டுமின்றி சமுதாயத்திற்கு தேவையான பல நல்ல கருத்துக்களை தன்னால் முடிந்த அளவிற்கு மக்களிடம் கொண்டு சென்று விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறார்.
சென்னை மழை வெள்ளத்தில் பாதித்த போது RJ பாலாஜி மற்றும் சித்தார்த்தும் செய்த உதவிகள் அனைவரும அறிந்ததே. இந்நிலையில் இவர் ஜி.வி.பிரகாஷ் நடிக்கும் கடவுள் இருக்கான் குமாரு படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பில் பெரும் விபத்து நிகழ்ந்துள்ளது.
இதுக்குறித்து பாலாஜி ’நல்ல வேலை இந்த பெரிய விபத்தில் கடவுள் கருணையால் சிறிய காயத்துடன் தப்பித்ததாக’ தன் டுவிட்டர் பக்கத்தில் கூறியுள்ளார். இச்செய்தி திரையுலகத்தினரிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
N5




