செய்திகள்

மஹிந்த அணி எம்.பிக்கள் ஜெனிவாவில் ஆர்ப்பாட்டம் நடத்த திட்டம்

ஒன்றிணைந்த எதிர்க்கட்சியின் எம்.பிக்கள் குழுவொன்று  ஜெனிவாவில் ஐ.நா அலுவலகத்திற்கு முன்னாள் எதிர்வரும் 31ஆம் திகதி ஆர்ப்பாட்டமொன்றில் ஈடுபட தீர்மானித்துள்ளனர்.
உதய கம்மனபில , பந்துலகுணவர்தன அடங்காலாக எம்.பிக்கள் சிலர் அந்த ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடவுள்ளனர். இந்த ஆர்ப்பாட்டத்திற்கு சுவிஸ் பொலிஸார் அனுமதி வழங்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இலங்கை இராணுவத்தினரை பாதுகாப்போம் என்ற தொனிப் பொருளின் கீழ் இந்த ஆர்ப்பாட்டம் நடத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

 n10