இரண்டு பிரம்மாண்டங்கள் ஒன்றாக மோதுகின்றார்கள்
சூப்பர் ஸ்டார் ரஜினியின் நடிப்பில் பிரம்மாண்டமாக உருவாகும் ‘2.0’ படமும், ராஜமவுலியின் ‘பாகுபலி: தி கென்கூஸன்’ படமும் ஒரே நாளில் திரைக்கு வர இருப்பதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
இருவேறு தோற்றத்தில் ரஜினி நடித்து மிகப்பெரிய வெற்றி பெற்ற ‘எந்திரன்’ படத்தின் இரண்டாவது பாகமாக ‘2.0’ என்ற பெயரில் பிரமாண்டமாக படத்தை இயக்குகின்றார் சங்கர்.
அதேநேரம், வரலாற்றுப் பின்னணியுடன் ரசிகர்களுக்கு விருந்தாக அமைந்த ‘பாகுபலி: தி பிகினிங்’ படத்தின் இரண்டாவது பாகமாக ‘பாகுபலி: தி கென்கூஸன்’ படத்தை ராஜமௌலி இயக்கி வருகிறார்.
இந்த இரு படங்களும் 2017 ஆம் ஆண்டு ஏப்ரல் 14ஆம் திகதி வெளியாக இருப்பதாக ஒரு தகவல் வெளியாகியுள்ளது. அப்படி வெளியானால் தமிழ் திரை வரலாற்றில் இது, மிகப்பெரிய மோதலாக இருக்கும் என்று ரசிகர்களால் நம்பப்படுகிறது.
இரண்டும் இரண்டாம் பாகங்களாக உருவாகும் கதைகள் என்பதுடன், இரண்டும் இரு பெரும் கூட்டணிகளில் படமாக்கப்படுகின்றன. எனவே, ஒன்றுக்கொன்று சளைத்ததல்ல என்ற நிலையில், இடம்பெற இருக்கிறது ஒரு மோதல், ஆனால் மோதல், இந்த வருடம் அல்ல, அடுத்த வருடம்!




