சிறிய இடைவெளிக்கு பின்னர் நிக்கி கல்ராணி
டார்லிங், யாகாவராயினும் நாகாக்க படத்துக்கு பிறகு நிக்கி கல்ராணியை தமிழில் காணோம். சிறிது இடைவெளிக்கு பிறகு அவர் நடித்திருக்கும் ‘கோ 2′ வரும் மே 6ஆம் திகதி ரிலீஸுக்கு தயாராகி இருக்கிறது.
அமெரிக்க முன்னாள் அதிபர் நிக்சனை பிபிசி நிருபர் ஃபராஸ் எடுத்த புகழ்பெற்ற பேட்டிதான் பல அரசியல் த்ரில்லர்களுக்கு காரணமாக இருந்தது. இதை அடிப்படையாக வைத்து தமிழ் சினிமாவில் வெற்றி படங்கள் உருவாகி இருக்கின்றன.
கே.வி.ஆனந்த் இயக்கத்தில் வெற்றி பெற்ற ‘கோ’ இதன் பின்னணியிலான ஒரு கதை எனலாம். இப்படத்தை தயாரித்த எல்ரெட் குமார், ஜெயராமன் அடுத்து ‘கோ 2′ தயாரிக்கின்றனர். சரத் இயக்குகிறார். பாபி சிம்ஹா, பிரகாஷ்ராஜ், நிக்கி கல்ராணி நடித்திருக்கின்றனர்.
இதுபற்றி பாபி சிம்ஹா கூறும்போது, ‘இதுவரை செய்யாத புதியவேடம் ஏற்றிருக்கிறேன். எனக்கு புதிய அனுபவமாகவும் இது அமைந்தது’ என்றார்.




