செய்திகள்

சொல்லாமல் சொல்லும் ஜனனி ஐயர்

பொதுவாக நடிகைகள் என்றாலே காதல் கிசுகிசுவில் சிக்காமல் தப்புவது இல்லைஇ ஜனனி ஐயரும் காதல் கிசுகிசுவில் சிக்கியிருக்கிறார்இ இவர் வாரிசு நடிகர் ஒருவரை காதலித்து வருவதாக செய்தி வெளியாகியுள்ளது.

இதுகுறித்து ஜனனி கூறியதாவதுஇ ‘சினிமா வட்டாரத்திலேயே எனக்கு நண்பர்கள் மிகவும் குறைவு. நான் எந்த நடிகரையும் காதலிக்கவில்லைஇ யாருடனும் காதல் வயப்படவில்லை. உங்களிடம் நான் கேட்பது எல்லாம் தயவு செய்து இதுபோன்று செய்தி பரப்பாதீர்கள். இப்போதைக்கு என் கவனம் எல்லாம் சினிமாவில் மட்டுமே இருக்கிறது’ என்றார்.

‘என்னுடைய திருமணம் சரியான நேரம் வரும் கண்டிப்பாக நடக்கும்இ அதேசமயம் எனது திருமணம் வீட்டில் பார்த்து வைத்து செய்யும் திருமணமாக மட்டும் இருக்காது’ என்றும் ஜனனி கூறியிருக்கிறார். இதன்மூலம்இ தான் கண்டிப்பாக காதல் திருமணம் தான் செய்வேன் என்று சொல்லாமல் சொல்லிவிட்டார் ஜனனி ஜயர்.

N5