ஜனாதிபதி ஒபாமாவை ஜப்பானில் சந்திக்கிறார் மைத்திரி: இராஜத்திர வட்டாரங்கள் ஏற்பாடு
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கும், அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமாவுக்கும் இடையில் சந்திப்பு ஒன்றை ஒழுங்குபடுத்தும், இராஜதந்திர முயற்சிகள், கொழும்பிலும், வொசிங்டனிலும் முன்னெடுக்கப்பட்டு வருவதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஜப்பானில் நடக்கவுள்ள, வளர்ச்சியடைந்த நாடுகளின் (ஜி-7) மாநாட்டின் ஒரு பக்க நிகழ்வாகவே இந்தச் சந்திப்பு இடம்பெறவுள்ளது. அடுத்த மாதம் 26, 27ஆம் நாள்களில், ஜப்பானின் ஷிமா நகரில், ஜ-7 நாடுகளின் தலைவர்களின் உச்சி மாநாடு நடக்கவுள்ளது.
இந்த மாநாட்டுக்கு சிறப்பு விருந்தினர்களாக, பங்கேற்குமாறு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, வியட்நாம் பிரதமர் ஆகியோருக்கு ஜப்பானியப் பிரதமர் சின்ஷோ அபே அழைப்பு விடுத்துள்ளார்.
இந்த மாநாட்டின் ஒரு அங்கமாகவே ஜனாதிபதி பராக் ஒபாமாவை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன சந்திப்பார் எனத் தெரிவிக்கப்படுகின்றது.
R-06




