செய்திகள்

சந்திரிகாவின் விஷேட செய்தியுடன் பிரபாகரனை சந்தித்த மனோ கணேசன்: அவரே வெளியிடும் தகவல்

ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான அரசாங்கம் கலைக்கப்பட்ட பின்னர் ஜனாதிபதியாக இருந்த சந்திரிகா குமாரதுங்கவின் விஷேட செய்தி ஒன்றுடன் விடுதலைப் புலிகளின் தலைவர் வே.பிரபாகரனை தான் சென்று சந்தித்ததாக தமிழ் முற்போக்கு முன்னணியின் தலைவரும் அமைச்சருமான மனோ கணேசன் தெரிவித்திருக்கின்றார்.

விடுதலைப் புலிகள் அமைப்புடன் ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான ஐக்கிய தேசிய முன்னணி அரசாங்கம் 2002 இல் பேச்சுக்களை ஆரம்பித்திருந்தது. இருவருடங்ளில் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்கவினால், ரணில் தலைமையிலானன அரசாங்கம் கலைக்கப்பட்டது. இந்தச் சந்தர்ப்பத்திலேயே சந்திரிகாவின் செய்தி ஒன்றுடன் பிரபாகரனை தான் சந்தித்ததாக மனோ கணேசன் தெரிவித்திருக்கின்றார்.

மனோ கணேசனை அழைத்த சந்திரிகா, தன்னுடைய விஷேட செய்தி ஒன்றை பிரபாகரனிடம் ஒப்படைக்க வேண்டும் எனக் கேட்டுக்கொண்டார். விடுதலைப் புலிகளுடன் சமாதானப் பேச்சுக்களைத் தொடர்வதற்கு தனக்குள்ள விருப்பத்தை வெளிப்படுத்தும் வகையிலேயே இநதச் செய்தியை அவர் அனுப்ப விரும்பினார்.

“ரணில் விக்கிரமசிங்க தனக்கு விருப்பமான பாணியில் பேச்சுக்களை முன்னெடுத்தார். இதனை நான் என்னுடைய பாணியில் முன்னெடுக்கவுள்ளேன்” என மனோ கணேசனிடம் சந்திரிகா தெரிவித்தார். சந்திரிகாவின் கோரிக்கையை ஏற்றுக்கொண்ட மனோ, அந்தச் செய்தியுடன் கிளிநொச்சி சென்றார். விடுதலைப் புலிகளின் தலைவரை இதன்போதுதான் முதல் முறையாக மனோ கணேசன் சந்தித்தார்.
R-06