செய்திகள்

அரசியலமைப்புக்கான வடமாகாண சபையின் யோசனை சபாநாயரிடம் முதலமைச்சரால் கையளிப்பு

வட மாகாண சபையால் நிறைவேற்றப்பட்ட அரசியலமைப்பு யோசனைகள் அடங்கிய ஆவணம் சபாநாயகர் கரு ஜயசூரியவிடம் வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரால் இன்று சபாநாயகரின் வாசஸ்தலத்தில் வைத்துக் கையளிக்கப்பட்டது.

வட மாகாண மக்களின் அரசியல் எதிர்பார்ப்புகள், அபிலாi~களை புதிய அரசியலமைப்பில் உள்ளீர்த்துக் கொள்வதற்காகவே வட மாகாண சபையினால் இந்த தீர்வுத்திட்டம் தயாரிக்கப்பட்டிருந்ததுடன், அதன் முன்மொழிவுகளுக்கு வட மாகாண சபை கடந்த 22 ஆம் திகதி ஏகமனதாக அங்கீகாரம் வழங்கியிருந்தது.

இவ்வாறான நிலையில், பாராளுமன்றக் கட்டிடத்தொகுதியிலுள்ள சபாநாயகரின் அலுவலகத்தில் சபாநாயகர் கரு ஜயசூரியவை இன்று சந்தித்த வட மாகாண முதலமைச்சர் விக்னேஸ்வரன் அந்த தீர்வு திட்டத்தையும் அவரிடம் உத்தியோகப்பூர்வமாக கையளித்துள்ளார்.

வட மாகாண சபையின் முன்மொழிவுகள் சபாநாயகரிடம் கையளிக்கப்படும் போது, முதலமைச்சர் விக்னேஸ்வரனுடன் வட மாகாண சபையின் எதிர்க்கட்சித் தலைவர் எஸ். தவராசாவும் கலந்துக்கொண்டிருந்தார்.

02