பாராளுமன்றத்தில் மோதல் : தாக்குதலுக்கு இலக்கான எம்.பியொருவர் வைத்தியசாலையில் அனுமதி
பாராளுமன்றத்தில் சற்றுமுன்னர் ஏற்பட்ட அமைதியின்மை ஏற்பட்ட நிலையில் அதன்போது காயமடைந்த எம்.பியொருவர் வைத்தியவாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் இராணுவ பாதுகாப்பு அகற்றப்பட்டமை தொடர்பாக அரசாங்க தரப்பினருக்கும் மற்றும் ஒன்றிணைந்த எதிரணி தரப்பினருக்குமிடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளதுடன் அதனால் சபையில் அமைதியின்மை ஏற்பட்டுள்ளது.
இதன்போது தாக்குதலுக்கு இலக்கான ஐக்கிய தேசிய கட்சியின் கேகாலை மாவட்ட எம்.பியான சந்தீப் சமரசிங்க காயமடைந்த நிலையில் தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதேவேளை சபாநாயகரினால் 5 நிமிடங்கள் சபை ஒத்தி வைக்கப்பட்டு மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
n10




