செய்திகள்
பிபாஷா பாசு, கரன் சிங் க்ரோவேர் திருமண பந்தத்தில் இணைந்தனர்
பொலிவூட் பிரபல நடிகையும் மாடல் அழகியுமான பிபாஷா பாசு, கரன் சிங் க்ரோவேர்ரை அண்மையில் திருமணம் செய்துள்ளார். இவர்களது திருமணம் பெங்கோலிய பாரம்பரிய முறைப்படி ஏப்ரல் 30 ல் நடைபெற்றது.
37 வயதான பிபாஷாவின் கணவரும் ஒரு நடிகர் ஆவார். திருமணத்தின் பின்னர் தனது பெயரை திருமதி பிபாஷா பாசு சிங் க்ரோவேர் என்று மாறியுள்ளதா இன்ச்டக்ரம் சமூக வலைத்தளத்தில் குறிப்பிட்டுள்ளார்.
பிபாஷா 2001 இலிருந்து நடித்து வருவதுடன் தமிழ்த் திரைப்படமான சச்சினில் நடித்தவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.






