ஓய்வுபெற்ற பிரசன்ன டி சில்வாவுக்கு இராணுவம் பிரியாவிடை
மேஜர் ஜெனரல் பிரசன்ன டி சில்வா நேற்றுடன் இராணுவத்தில் இருந்து ஓய்வுபெற்றுள்ளார்.
இராணுவத்தில் இருந்து நேற்றுடன் ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் பிரசன்ன டி சில்வாவுக்கு, அவரது தாய்ப் படைப்பிரிவான இலகு காலாட்படைப் பிரிவினால் பிரியாவிடை அளிக்கப்பட்டது.
பனாகொடவில் உள்ள இலகு காலாட்படைப் பிரிவின் தலைமையகத்தில் நேற்று மேஜர் ஜெனரல் பிரசன்ன டி சில்வாவுக்கு அணிவகுப்பு மரியாதை அளிக்கப்பட்டது.
இதில் இராணுவத்தின் மூத்த தளபதிகள், அதிகாரிகள் பலரும் கலந்து கொண்டனர்.
கடந்த ஆண்டு டிசெம்பர் 25ஆம் நாள், மேஜர் ஜெனரல் ஜெயத் டயஸ் ஒய்வுபெற்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

n10




