செய்திகள்

வன்முறைகளை ஒத்த சம்பவங்கள் இலங்கையில் தடுக்கப்பட வேண்டும் : ஐ.நா நிபுணர் குழு

இலங்கையில் சிறு சிறு வன்முறைச் சம்பவங்கள் இடம்பெறுவதாகவும் அவற்றை தடுப்பதற்கு அரசாங்கம் உரிய நடவடிக்கையெடுக்க வேண்டுமெனவும் இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டுள்ள ஐ.நா மனித உரிமைகள் தொடர்பான நிபுணர்கள் குழு தெரிவித்துள்ளது.
கொழும்பிலுள்ள ஐ.நா அலுவலகத்தில் இன்று  நடத்தப்பட்ட ஊடகவியலாளர் சந்திப்பில் உரையாற்றிய ஐ.நா நிபுணர் மொனிகா பின்டோவே இவ்வாறு தெரிவித்துள்ளார்.
நாட்டில் ஆட்சி  மாற்றம் ஏற்பட்டு நாடு சிறந்த பாதையில் பயணித்துக்கொண்டிருக்கின்றன. ஆனால் இன்னும் வன்முறைகளை ஒத்த சிறு சிறு சம்பவங்கள் இடம்பெற்று வருகின்றன. அதனை தடுக்க அரசாங்கம் நடவடிக்கையெடுக்க வேண்டும். அவ்வாறு செய்தால் நாடு சிறந்த இடத்தை பெறும். என அவர் தெரிவித்துள்ளார்.
N5