தல சொன்னா பண்ணிடலாம்! சூர்யா
சூர்யா தற்போது மிகவும் சந்தோஷத்தில் உள்ளார். தொடர்ந்து இரண்டு படங்களின் தோல்விக்கு பிறகு மாபெரும் வெற்றியை பெற்றுள்ளது 24 படம்.
டைம் மிஷின் பற்றிய இந்த கதைக்கு ரசிகர்கள் பேராதரவு கொடுத்துள்ளனர். தனது குடும்பத்தோடு அமெரிக்கா சென்றுள்ளார். அங்குள்ள திரையரங்கில் படம் பார்த்த பின்பு ரசிகர்களுடன் பேசியிருக்கிறார்.
அப்போது ரசிகர் ஒருவர், அஜித்துடன் எப்போது நடிப்பீர்கள் என்று கேட்டதற்கு தல சொன்னா பண்ணிடலாம் என்று கூறினாராம். இச்செய்தி அஜித், சூர்யா ரசிகர்கள் இருவரையும் மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. இன்னும் அஜித்தின் முடிவுக்கு தான் அப்போ காத்திருக்கணும்.
N5




