ஒரே நேரத்தில் இரு இடங்களில் ஆஜராகுமாறு எனக்கு உத்தரவு: நாமல் ராஜபக்ஷ
ஒரே நாளில் ஒரே நேரத்தில் இரண்டு இடங்களில் ஆஜராகுமாறு தனக்கு அழைப்பு வந்திருப்பதாக பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஸ தெரிவித்துள்ளார். ஒரே நேரத்தில் எவ்வாறு இரு இடங்களில் ஆஜராக முடியும் எனவும் அவர் கேள்வி எழுப்பியிருக்கின்றார்.
பாரிய நிதி மோசடி மற்றும் அதிகார துஸ்பிரயோகம் தொடர்பான ஜனாதிபதி ஆணைக்குழு மற்றும் நிதிக் குற்றவியல் விசாரணைப் பிரிவு ஆகியவற்றினால் இந்த அழைப்ப விடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
ஓரே நேரத்தில் எவ்வாறு தாம் இரண்டு இடங்களுக்கும் சமூகமளிக்க முடியும் என நாமல் ராஜபக்ஸ கேள்வி எழுப்பியுள்ளார். தனது டுவிட்டர் கணக்கில் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
R-06




