இந்தியா செல்லும் ஜனாதிபதி மைத்திரி சனிக்கிழமை மோடியுடன் பேச்சு
இந்தியாவுக்கான விஜயத்தை மேற்கொள்ளும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி எதிர்வரும் 14ஆம் திகதி சனிக்கிழமை சந்திக்கவுள்ளார். புதுடெல்லியில் இந்தச் சந்திப்பு இடம்பெறும் என்று ஜனாதிபதி செயலக பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார்.
மத்தியப் பிரதேச மாநிலத்தில் உள்ள உஜ்ஜெயினில் நடைபெறும் இந்து மத விழாவில் பங்கேற்க, பாரதீய ஜனதா கட்சி சார்பில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
இந்த அழைப்பை ஏற்று, இந்தியா செல்லும் போதே, இந்தியப் பிரதமருக்கும் இலங்கை ஜனாதிபதிக்கும் இடையிலான சந்திப்பு இடம்பெறவுள்ளது. பாரதீய ஜனதா கட்சியின் பொதுச்செயலர் தனிப்பட்ட முறையில் ஜனாதிபதிக்கான அழைப்பை நேரில் வந்து கையளித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
R-06




