சிறிசேனவுக்கு எதிராக இரண்டாவது நாளாகவும் லண்டனில் ஆர்ப்பாட்டம்
பொதுநலவாய நாடுகளின் ஊழல் எதிர்ப்பு மாநாட்டில் கலந்துகொள்ள லண்டன் வந்திருக்கும் இலங்கை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் நேற்று பிரித்தானிய தமிழர்கள் நடத்திய ஆர்ப்பாட்டம் இன்று வியாழக்கிழமையும் நடைபெற்றது.
பல்வேறு வாக்குறுதிகளை அளித்து ஆட்சிக்கு வந்த இலங்கையின் புதிய அரசாங்கம் அவற்றும் எவற்றையும் நிறைவேற்றவில்லை என்றும் தொடர்ந்தும் இலங்கையில் தமிழ் தேசத்தின் இருப்பை இல்லாமல் செய்யும் பல்வேறு நடவடிக்கைகளை முன்னெடுத்துவருவதாகவும் இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் பொருட்டே இந்த ஆர்ப்பாட்டம் ஏற்பாடு செய்யப்பட்டதாக பிரித்தானிய தமிழர் பேரவை தெரிவித்துள்ளது.
இறுதி யுத்தத்தில் மேற்கொள்ளப்பட்ட படுகொலைகளுக்கு அப்போது துணை பாதுகாப்பு அமைச்சராக செயற்பட்ட மைத்திரிபாலவுக்கும் பொறுப்பு இருப்பதாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் குற்றம் சாட்டினர்.
மழையையும் பொருட்படுத்தாமல் இந்த ஆர்ப்பாட்டம் இரு தினங்களும் தொடர்ந்து நடைபெற்றது.













