செய்திகள்

தாஜூதீன் கொலை: முன்னாள் பிரதிப் பொலிஸ் மா அதிபர் அநுர சேனநாயக்கவிடம் விசாரணை

பிர­பல றக்பி வீரர் வஸீம் தாஜுதீன் படு­கொலை விவ­காரம் தொடர்பில் மேல் மாகா­ணத்­துக்கு பொறுப்­பான முன்னாள் சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் அனுர சேன­நா­யக்­க­விடம் குற்றப் புல­னாய்வுப் பிரிவின் சிறப்புக் குழு­வினர் நேற்று இரண்­டா­வது நாளா­கவும் தீவிர விசா­ர­ணை­களை முன்­னெ­டுத்­துள்­ளனர்.

நேற்று முன்­தினம் முதல் முன்னாள் சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் அனுர சேன­நா­யக்­கவை விசா­ரணை செய்யும் நட­வ­டிக்­கை­களை குற்றப் புல­னாய்வுப் பிரிவின் உதவி பொலிஸ் அத்­தி­யட்சகர் விக்­ர­ம­சே­க­ரவின் கீழான சிறப்புக் குழு முன்­னெ­டுத்­துள்­ள­தாக பொலிஸ் தலை­மை­யக தக­வல்கள் தெரி­வித்­தன.

வஸீம் தாஜுதீன் படு­கொலை விவ­கா­ரத்தில் குற்­றத்தை மறைத்­தமை, சாட்­சி­களை அழித்­தமை, விசா­ர­ணை­களை நிறுத்­தி­யமை உள்­ளிட்ட பல்­வேறு குற்றச் சாட்­டுக்கள் தொடர்பில் அவ­ரிடம் விசா­ர­ணைகள் நடத்­தப்­ப­டு­வ­தாக பொலிஸ் தலை­மை­யக தக­வல்கள் தெரி­வித்­தன.

இந்த படு­கொலை விவ­காரம் தொடர்பில் உயர் பொலிஸ் அதி­கா­ரிகள் உள்­ளிட்ட பல பொலிஸ் உத்­தி­யோ­கத்­தர்கள் விசா­ர­ணைக்கு உட்­ப­டுத்­தப்­பட்­ட­மைக்கு அமை­வா­கவும், முன்னாள் நார­ஹேன்­பிட்டி பொலிஸ் நிலைய குற்­ற­வியல் பிரிவு பொறுப்­ப­தி­கா­ரியை கைது செய்து விசா­ரணை செய்­த­திலும் வெளிப்­ப­டுத்­தப்­பட்ட தக­வல்­க­ளுக்கு அமை­வா­கவே அனுர சேன­நா­யக்­க­விடம் இந்த விசா­ர­ணைகள் இடம்­பெற்று வரு­கின்­றன.

நேற்று முன்­தினம் முற்­பகல் வேளையில் குற்றப் புல­னாய்வுப் பிரி­வி­வுக்கு முதன் முறை­யாக அழைக்­கப்­பட்­டி­ருந்த முன்னாள் சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் அனுர சேன­நா­யக்க, அன்­றைய தினம் இரவு 11.30 மணி வரை விசா­ர­ணைக்கு உட்­ப­டுத்­தப்­பட்­டுள்ளார். இந் நிலையில் நேற்று அவர் மீண்டும் பிற்­பகல் 2 மணிக்கு குற்றப் புல­னாய்வுப் பிரி­வுக்கு அழைக்­கப்­பட்டு நீண்ட நேரம் விசா­ர­ணைக்கு உட்­ப­டுத்­தப்­பட்­டுள்ளார்.

இத­னி­டையே வஸீம் தாஜு­தீனின் படு­கொலை இடம்­பெற்­ற­தாக சந்­தே­கிக்­கப்­படும் நார­ஹேன்­பிட்டி, சாலிகா மைதான பகு­திக்கு பொறுப்­பான பொலிஸ் பிரி­வான நார­ஹேன்­பிட்டி பொலிஸ் நிலை­யத்தின் அப்­போ­தைய போக்குவரத்து பொறுப்­ப­தி­கா­ரி­யாக கட­மை­யாற்­றிய பொலிஸ் பரி­சோ­தகர் சரத் சந்­திர சம்­பவம் குறித்து நீதி­மன்­றுக்கு இர­க­சிய வாக்கு மூலம் ஒன்­றினை வழங்­கி­யுள்ளார்.

கடந்த திங்கட்கிழமையன்று கொழும்பு மேலதிக நீதிவான் நிஷாந்த பீரிஸுக்கு அவரது அறையில் வைத்து, குற்றவியல் நடை முறை சட்டக் கோவையின் 127ஆவது சரத்துக்கு அமைவாக அவர் இந்த வாக்கு மூலத்தை நீதிவானுக்கு வழங்கியுள்ளார்.
R-06