செய்திகள்

யாழ். குடாநாட்டில் குற்றச்செயல்கள்: அரசாங்கம் தீவிர கவனம் என்கிறார் அமைச்சர் சாகல

யாழ். குடா­நாட்டில் இடம்­பெறும் குற்றச் செயல்கள் தொடர்பில் அர­சாங்கம் தீவி­ர­ கவனம் செலுத்தி வரு­வ­தாக சட்டம் மற்றும் ஒழுங்­குகள் அமைச்சர் சாகல ரட்­ணா­யக்க நேற்று சபையில் தெரி­வித்தார்.

பாரா­ளு­மன்­றத்தில் நேற்று வியா­ழக்­கி­ழமை ஈ.பி.டி.பி. செய­லாளர் நாய­கமும் யாழ்.மாவட்ட எம்.பி.யுமான டக்ளஸ் தேவா­னந்தா 23 இன் கீழ் இரண்டில் எழுப்­பிய யாழ். குடா­நாட்டில் அதி­க­ரிக்கும் குற் றச் செயல்கள் தொடர்­பான கேள்­விக்கு பதி­ல­ளிக்­கை­யி­லேயே அமைச்சர் சாகல ரட்­ணா­ யக்க இவ்­வாறு தெரி­வித்தார்.

அவர் மேலும் கூறு­கையில், “யாழ். குடா­நாட்டில் அதி­க­ரிக்கும் குற்றச் செயல்­க­ளுடன் குண்­டர்­க­ளுக்கு மட்டும் தொடர்­பில்லை. இவ்­வா­றான குற்றச் செயல்­க­ளுடன் தனிப்­பட்ட நபர்­களும் தொடர்­பு­பட்­டுள்­ளார்கள். இங்கு அதி­க­ரித்துச் செல்லும் குற்றச் செயல்கள் தொடர்பில் அரசின் தீவிர கவ னம் தொடர்­கின்­றது. குடா­நாட்டுக் குற்றச் செயல்கள் தொடர்பில் டக்ளஸ் தேவா­னந்தா எம்.பி. பல கேள்­வி­களை முன்­வைத்­துள்ளார்.

தற்­போது நாட்டில் ஏற்­பட்­டுள்ள இயற்கை அனர்த்தம் தொடர்­பிலும் அதில் பலி­யான பாதிக்­கப்­பட்ட மக்கள் தொடர்­பிலும் எமது அமைச்சு கவனம் செலுத்­தி­யுள்­ளதால் இக் கேள்­வி­க­ளுக்கு என்னால் முழு­மை­யான பதில் வழங்க முடி­யா­த­தை­யிட்டு மன்­னிப்பு கோரு­கின்றேன். அடுத்த பாரா­ளு­மன்ற அமர்வில் குடா நாட்டு குற்றச் செயல்கள் தொடர்பான முழு மையான பதிலை வழங்குவேன் என்றார்.
R-06