செய்திகள்

வெள்ளத்தில் படகு ஓட்டி விளையாடிய இருவர் நீரில் மூழ்கி பலி: ஹங்வெல்லவில் சம்பவம்

வெள்ளத்தில்  படகு ஓட்டி விளையாடிக்கொண்டிருந்த இருவர் படகு கவிழ்ந்து  நீரில் மூழ்கி உயிரிழந்த சம்வமொன்று ஹங்வெல்ல பகுதியில் நேற்று முன்தினம் வெள்ளிக்கிழமை மாலை இடம்பெற்றுள்ளது.
Flood in Sri Lanka
களனி ஆற்றின் நீர்மட்டம் அதிகரித்ததால்  ஹங்வெல்ல எம்புல்கம பகுதியில் வெள்ளம் ஏற்பட்டிருந்த நிலையில் அந்த பகுதியில் வெள்ள நீரில் சிறிய படகொன்றில் 6 பேர் விளையாடிக்கொண்டிருந்த போதே இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

படகு கவிழ்ந்ததால்  6 பேரும் நீரில் மூழ்கியுள்ளதுடன் இதன்போது 4 பேர் பிரதேசவாசிகினால் காப்பற்றப்பட்டுள்ள போதும் இருவர் நீரில் மூழ்கி காணாமல் போயுள்ளனர்.
Flood in Sri Lanka
அதனை தொடர்ந்து பிரதேச வாசிகளும் கடற்படையினரும் இணைந்து நடத்திய தேடுதலில் போது காணாமல் போயிருந்த இருவரும் சடலங்களாக மீட்கப்பட்டுள்ளனர். இவ்வாறாக 15 வயது சிறுவனொருவனும் அந்த சிறுவனின் சித்தப்பாவான 47 வயதுடைய நபரொருவருமே உயிரிழந்துள்ளனர்.
R-06