செய்திகள்

பசிலின் செயலாளர்,பொருளாளருக்கு பிணை

 முன்னாள் பொருளாதார அமைச்சர் பசில் ராஜபக்சவுக்கு சொந்தமான கம்பஹா ஒருதொட்ட காணி சம்பந்தமான முறைகேடான கொடுக்கல்-வாங்கல் தொடர்பில் கைது செய்யப்பட்ட இருவர் பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.

பொலிஸ் நிதி மோசடி விசாரணைப் பிரிவினரால்  இன்று கைது செய்யப்பட்ட பசில் ராஜபக்சவின் முன்னாள் செயலாளர் கலாநிதி விலி கமகே, ராஜபக்ச நிதியத்தின் பொருளாளர் ஆரியரத்ன தஹநாயக்க ஆகியோரை கடும் நிபந்தனை பிணையில் விடுதலை செய்யுமாறு கம்பஹா மேலதிக நீதவான் லலித் கன்னங்கர உத்தரவிட்டார்.

தலா 50 ஆயிரம் ரொக்கப் பிணை மற்றும் தலா 40 லட்சம் ரூபா பெறுமதியான சரீரப் பிணைகளில் சந்தேக நபர்களை விடுதலை செய்யுமாறு உத்தரவிட்ட நீதவான், வெளிநாட்டு செல்லவும் தடை விதித்துள்ளார்.

பிரதி மாதந்தோறும் இறுதி தினத்தில் பொலிஸ் நி்தி மோசடி விசாரணைப் பிரிவில் ஆஜராகி கையெழுத்திட வேண்டும் எனவும் நீதவான் உத்தரவிட்டார்.

n10