செய்திகள்

‘புங்குடுதீவு: சிதைவுறும் நிலம்’ லண்டனில் வெளியிடப்பட்டது

‘புங்குடுதீவு: சிதைவுறும் நிலம்’ என்ற ஆவணப்படம் கடந்த ஞாயிற்றுக்கிழமை லண்டனில் வெளியிடப்பட்டது.

கிழக்கு லண்டன் பல்கலைக்கழகத்தில் மானிடவியற் துறையில் கலாநிதிப்பட்ட ஆய்வு செய்துவரும் தங்கேஸ் பரம்சோதி இந்த ஆவணப்படத்தை தயாரித்திருந்தார்.

இந்த ஆவணப்படம் மூன்று தசாப்த்தங்களாக இடம்பெற்ற ஆயுத யுத்தத்தினாலும், புங்குடுதீவில் வாழ்ந்த மக்களின் பாரிய உள்ளூர், வெளியூர் இடப்பெயர்வுகளினாலும் தற்பொழுது புங்குடுதீவு எதிர்கொண்டுள்ள நிலம்சார்ந்த பிரச்சினைகளை முன்னிறுத்துகின்றது. புங்குடுதீவில் தற்பொழுது வாழும் மக்கள் தமது நாளாந்த வாழ்வில் எதிர்கொள்கின்ற பல பிரச்சினைகளை இந்த ஆவணப்படும் நிலத்தோடு தொடர்படுத்தி ஆராய்கின்றது.

மாலை 5.30 மணி முதல் இரவு 9.30 மணி வரை நடைபெற்ற இந்த ஆவண வெளியீட்டில் புங்குடுதீவு பற்றிய புகைப்பட கண்காட்சி ஒன்றும் நடைபெற்றது. புங்குடு தீவு நலன்புரி ஒன்றியம் -பிரித்தானியா கிளையிணீரால் ஒழுங்கமைக்கப்பட்ட அந்த ஆவணப்பட வெளியீட்டு விழாவில் பல ஊடகவியலாளர்களும் கலைஞர்களும் பெரும் ஏராளமான இங்கிலாந்து வாழ் புங்குடுதீவு மக்களும் கலந்துகொண்டனர்.

ஆவணப்படம் பற்றிய விமர்சனங்களை ஊடகவியலாலர்களான நிராஜ் டேவிட், இளையதம்பி தயானந்தா ஆகியோர் செய்தனர்.

[youtube url=”https://www.youtube.com/watch?v=84QZESWfKtE” width=”500″ height=”300″]

[youtube url=”https://www.youtube.com/watch?v=7t4B9LyG7Ug” width=”500″ height=”300″]