செய்திகள்
வெள்ளம் வந்த பகுதியில் வீடுகளை சுத்தம் செய்ய சுத்தமான நீரின்றி மக்கள் அவதி
கடந்த வாரம் களனி கங்கையின் நீர்மட்டம் அதிகரித்தமையினால் கொழும்பு மற்றும் புறநகர் பகுதியில் ஏற்பட்ட வெள்ளம் தற்போது வடிந்தோடும் நிலையில் வெள்ளத்தினால் மூழ்கியிருந்த வீடுகள் மற்றும் கிணறுகளை சுத்தம் செய்வதற்காக சுத்தமான நீர் கிடைக்காது மக்கள் அவதிப்படுவதனை அவதானிக்கக் கூடியதாகவுள்ளது.
சிலர் வீட்டுக்கு வெளியே தேங்கிக்கிடக்கும் வெள்ள நீரிலேயே வீடுகளையும் வீட்டு உபகரங்களையும் கழுவுவதனை அவதானிக்க முடிகின்றது.
இதேவேளை கொலன்னாவ மற்றும் மீதொடுமுல்ல போன்ற பிரதேசங்களில் குப்பை மேடுகளிலிருந்து வெள்ளத்தில் கலந்திருந்த குப்பைகள் காரணமாக அந்த பகுதி மக்கள் பல்வேறு இன்னல்களுக்கு முகம்கொடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

n10




