தமிழ்ப் பத்திரிகைகள் மீது வடமாகாண சபைக் கூட்டத்தில் கடும் குற்றச்சாட்டு
வடமாகாண சபையின் கூட்டத் தொடர் இன்று மாகாண தவிசாளர் சி.வி.கே.சிவஞானம் தலைமையில் ஆரம்பமான போது தமிழ்ப் பத்திரிகைகள் கடுமையான விமர்சனத்துக்குள்ளாக்கப்பட்டன.
வடமாகாண சபை உறுப்பினர்களான ஆர்னோல்ட், அன்டன் ஜெனநாதன் ஆகியோர் யாழ்ப்பாணத்திலிருந்து வெளிவரும் உதயன், வலம்புரி, தினக்குரல் பத்திரிகைகள் மஞ்சள் பத்திரிகைகள்போல வெளிவருவதாக கடுமையாகச் சாடினார்கள்.
இதன்போது அவைத் தலைவர் சி.வி.கே.சிவஞானமும் இணைந்துகொண்டு பத்திரிகைகளையும், அவற்றில் வெளிவரும் கார்ட்டூன்களையும் கடுமையக விமர்சித்தார்கள். குறிப்பிட்ட சில பத்திரிகையாளர்களின் பெயர்களும் குறிப்பிடப்பட்டு, அவர்கள் மீதும் தாக்குதல் தொடுக்கப்பட்டது.
வடமாகாண சபையில் ஒரு தரப்பினருடைய செயற்பாடுகளை பத்திரிகைகள் விமர்சனத்துக்குள்ளாக்கிய நிலையிலேயே அவற்றின் மீது “மஞ்சள் பத்திரிகைகள்” என குறிப்பிட்ட உறுப்பினர்கள் விமர்சனத்தை முன்வைத்ததாக ஊடகத்துறை வட்டாரங்கள் தெரிவித்தன.




