செய்திகள்

புனர்வாழ்வு பெற்ற முன்னாள் போராளிகள் 8 பேர் சமூகத்துடன் இணைப்பு

தமிழீழ விடுதலைப் புலிகளுடன் தொடர்புகளைப் பேணியவர்கள் என்ற சந்தேகத்தின் பெயரில் கைது செய்யப்பட்டு நீதிமன்ற உத்தரவுக்கமைய புனர்வாழ்வு பெற்று வந்த 8 பேர் இன்று உறவினர்களிடம் கையளிக்கப்பட்டனர்.
பூந்தோட்டம் புனர்வாழ்வு நிலையத்தில் இடம்பெற்ற இந்நிகழ்வில் புனர்வாழ்வு ஆணையாளர் நாயகம் மேஜர் ஜெனரல் ஜானக ரத்னாயக்கா அவர்கள் இரு சகோதரர்கள் உள்ளிட்ட எட்டு பேரையும் அவர்களது உறவினர்களிடம் கையளித்தார்.
இதன்போது புனர்வாழ்வு பெற்ற முன்னாள் போராளிகளின் கருத்துபகிர்வுகள் மற்றும் அவர்களின் கலை நிகழ்வுகளும் இடம்பெற்றிருந்தன. இந்நிகழ்வில் புனர்வாழ்வுப் உதவிப் பணிப்பாளர் பிரிகேடியர் தர்சன லியனகே, பூந்தோட்ட புனர்வாழ்வு நிலைய பொறுப்பதிகாரி, இராணுவ அதிகாரிகள், மதகுருமார், புனர்வாழ்வு பெற்று வரும் போராளிகள் மற்றும் அவர்களின் உறவினர்கள் எனப்பலரும் கலந்து கொண்டனர்.IMG_4908 iu
n10