செய்திகள்

ஊழல்வாதிகளை ஐ.தே.கட்சி அரசாங்கத்தில் இணைத்துக் கொண்டால் கடும் தீர்மானத்தை எடுக்க நேரிடும்:துமிந்த

ஐக்கிய தேசியக் கட்சி ஊழல் மோசடியாளர்களை அரசாங்கத்துடன் இணைத்துக் கொண்டால் கடும் தீர்மானம் எடுக்கப்படும் என ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளரான அமைச்சர் துமிந்த திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.

பாரிய ஊழல், மோசடிகள் தொடர்பாக குற்றம் சுமத்தப்பட்டுள்ள அரசியல்வாதிகள் மற்றும் நபர்களை அரசாங்கத்தின் வேலைகளின் சம்பந்தப்படுத்தி கொள்வதை ஐக்கிய தேசியக் கட்சி நிறுத்தவில்லை என்றால், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்கு கடுமையான தீர்மானம் ஒன்றை எடுக்க நேரிடும்.

குற்றச்சாட்டுக்களை எதிர்நோக்கியுள்ள நபர்களுடன் ஒப்பந்தங்களை செய்து கொண்டு அவர்களுக்கு அரசாங்கத்தில் உயர் பதவிகளை வழங்கும் அமைச்சர்கள் சம்பந்தமாக ஐக்கிய தேசியக் கட்சி உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.

N5