செய்திகள்

அரநாயக்க மண்சரிவில் காணாமல் போனோரை தேடும் பணிகள் முடிவுக்கு வந்தன

அரநாயக்க மண்சரிவு அனர்த்தில் மண்ணில் புதையுண்டு காணமல் போனோரை தேடும் நடவடிக்கைகளை முடிவுக்கு கொண்டு வந்துள்ளதாக அங்கு மீட்புப்பணிகளுக்கு பொறுப்பான மேஜர் ஜெனரல் சுதந்த ரணசிங்க உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளார்.
இன்று அந்த பகுதியில் நடைபெற்ற விசேட வழிபாட்டு நிகழ்வில் கலந்துக்கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
கடந்த 21 ஆம் திகதி ஏற்பட்ட குறித்த மண்சரிவு அனர்த்தத்தில் 144 பேர் மண்ணில் புதையுண்டு காணாமல் போயிருந்த நிலையில் அவர்களில் 47 பேரின் உடல்களும் மற்றும் உடற்பாகங்களும் மாத்திரமே மீட்புக் குழுவினரால் மீட்கப்பட்டிருந்தன. என்பது குறிப்பிடத்தக்கது.
n10