செய்திகள்

கொஸ்கம வெடிப்பு சத்தம் பல கிலோ மீற்றர் தூரத்திற்கு கேட்கிறது ; புகையால் மக்கள் வீதிகளில்

அவிசாவளை கொஸ்கம பகுதியில் அமைந்துள்ள இராணுவ முகாமிலுள்ள ஆயுதக் களஞ்சியசாலையில் வெடி பொருட்கள் வெடிக்கும் சத்தம் பல கிலோ மீற்றர் தூரத்திற்கு தொடர்ந்தும் கேட்டுக்கொண்டிருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது.
கிட்டத்தட்ட 25 கிலோ மீற்றருக்கும் அதிக தூரம் சத்தங்கள் கேட்டுக்கொண்டிருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது. குறிப்பாக எட்டியாந்தோட்டை  , கடுவலை வரை அந்த சத்தங்கள் கேட்டுக்கொண்டிருப்பதுடன் வானிலுத் வெளிச்சம் தொடர்ந்தும் காணப்படுவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
இதேவேளை அந்த சத்தம் காரணமாக தூர இடங்களிலுள்ள மக்களும் அச்சத்தில் வீடுகளை விட்டு வெளியேறி வீதிகளில் இருப்பதுடன் அந்த பிரதேசங்களில் கடும் புகையாக காணப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது.
எவ்வாறாயினும் குறித்த முகாமை சுற்றி 6 கிலோ மீற்றர் தூரத்திலுள்ள மக்கள் தற்போது வெளியேற்றப்பட்டு வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.
R-06