செய்திகள்
அவிசாவளை பிரிவு பாடசாலைகள் அரச நிறுவனங்களுக்கு நாளை விடுமுறை: அரசு அறிவிப்பு
அவிசாவளைப் பிரிவுக்கு உட்பட்ட பாடசாலைகள் மற்றும் அரச நிறுவனங்கள் நாளை திங்கட்கிழமை மூடப்பட்டிருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஜனாதிபதி மைத்திபால சிறிசேனவின் உத்தரவையடுத்தே இந்த அறிவிப்பு இன்றிரவு விடுக்கப்பட்டது.
கொஸ்கம சாலாவ இராணுவ முகாமில் ஏற்பட்டுள்ள பாரிய வெடிப்புச் சம்பவத்தையடுத்து பொதுமக்கள் வெளியேறிக்கொண்டிருக்கும் நிலையிலேயே இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
R-06




