தீ கட்டுப்பாட்டுக்குள் வந்தது! வெடிப்பு சத்தம் தொடர்ந்தும் கேட்கின்றது
அவிசாவளை கொஸ்கம இராணுவமுகாமிலுள்ள ஆயுதக்களஞ்சியசாலையில் ஏற்பட்ட தீ தற்போது கட்டுப்பாட்டுக்கொண்டுவரப்பட்டுள்ளதாக இராணுவத்தினர் தெரிவித்துள்ளனர். எவ்வாறாயினும் அங்கு தொடர்ந்தும் இடையிடையெ வெடிப்புச் சத்தங்கள் கேட்டுக்கொண்டிருப்பதாக பிரதேசவாசிகள் தெரிவிக்கின்றனர்.
இதேவேளை தீ கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்துள்ள போதும் அந்த பிரதேசத்தில் கடும் புகை மூட்டம் நிலவுவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
இதனால் நேற்று மாலை அந்தப்பகுதியிலிருந்து வெளியேற்றப்பட்ட மக்கள் மீண்டும் வீடுகளுக்கு திரும்புவதற்கான அறிவிப்புகள் இன்னும் விடுக்கப்படவில்லை. தற்போது ஹங்வலை , கொஸ்கம , புவக்பிட்டிய உள்ளிட்ட பிரதேசங்களை உள்ளிட்ட மக்கள் தூர இடங்களிலுள்ள பாடசாலைகளிலும் மற்றும் விகாரைகளிலும் தங்கியிருக்கின்றனர்.
அத்துடன் தொடர்ந்தும் அவிசாவளை கொழும்பு வீதி மூடப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. இந்த சம்வத்தில் இது வரை ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் 47 பேர் காயமடைந்துள்ளதாக இராணுவ தகவல்கள் தெரிவிக்கின்றன.
R-06




