புதிய கட்சி அமைத்து உள்ளுராட்சி தேர்தலில் போட்டியிட வேண்டும்: மகிந்தவிடம் கோரிக்கை
விரைவில் நடைபெறும் என எதிர்பார்க்கப்படும் உள்ளுராட்சிமன்றத் தேர்தல்களில் புதிய கட்சி ஒன்றை அமைத்து போட்டியிட வேண்டும் என ஒள்ளுராட்சி மன்றங்களின் தலைவர்கள் பிரதித் தலைவர்கள் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவை வலியுறுத்திக் கேட்டுக்கொண்டிருக்கின்றார்கள்.
பத்தரமுல்லையிலுள்ள மகிந்த ராஜபக்ஷவின் அலுவலகத்தில், அவருக்கு ஆதரவளிக்கும் உள்ளுராட்சி மன்றங்களின் முன்னாள் தலைவர்கள் பிரதித்தலைவர்கள் அவரைச் சந்தித்து உரையாடினார்கள். நேற்று இச்சந்திப்பு இடம்பெற்றது. அதன்போதே மேற்படி கோரிக்கை அவர்களால் முன்வைக்கப்பட்டது.
மகிந்த ராஜபக்ஷவுடன் பாராளுமன்ற உறுப்பினர்களான பவித்திரா வன்னியாராட்சி, பிரசன்ன ரணதுங்க ஆகியோரும் இந்தச் சந்திப்பில் கலந்துகொண்டிருந்தார்கள். இதன்போது, புதிய கட்சி ஒன்றை அமைத்து அடுத்து வரப்போகும் உள்ளுராட்சிமன்றத் தேர்தல்களை எதிர்கொள்ள வேண்டும் என்ற கோரிக்கை தொடர்பில், மகிந்த ராஜபக்ஷ திட்டவட்டமான பதில் எதனையும் தெரிவிக்கவில்லை.
R-06




