செய்திகள்

உடலில் குண்­டுத்­து­கள்­க­­ளுடன் இருப்­போ­ருக்கு விசேட சிகிச்­சை : பிரதமர் ரணில் உறுதி

யுத்­தத்தின் போது பொது­மக்­க­ளுக்கு பாதிப்­புக்கள் நிகழ்ந்­தன என்­பதை ஏற்­றுக்­கொள்­கின்றோம். உட லில் குண்­டுத்­து­கள்­க­ளுடன் இருப்­ப­வர்­க­ளுக்கு பூரணசிகிச்­சை­களை வழங்­கு­வ­தற்கு அர­சாங்கம் தயா­ரா­க­வி­ருக்­கின்­றது என்று பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க தெரி­வித்தார்.

அத்­தோடு குண்­டு­து­கள்­க­ளுடன் வாழும் மாண­வர்கள் மற்றும் பொது­மக்கள் தொடர்­பான உத்­தி­யோ­க­பூர்­வ­மான அறிக்கை இது­வ­ரையில் கிடைக்­க­வில்லை என்றும் தெரி­வித்த பிர­தமர் உரிய தக­வல்கள் அடங்­கிய அறிக்­கை­யொன்றை தன்­னி­டத்தில் கைய­ளிக்­கு­மாறு கோரி­ய­தோடு உடன் மருத்­துவ தேவைகள் காணப்­படின் அமைச்சர் சுவா­மி­நாதன் மற்றும் சுகா­தார அமைச்சர் ராஜித சேனா­ரத்­ன­வுடன் கலந்­தா­லோ­சித்து உத­வி­களைப் பெற்றுக் கொள்ள முடியும் எனவும் குறிப்­பிட்டார்.

பாரா­ளு­மன்­றத்தில் நேற்று புதன்­கி­ழமை பிர­த­ம­ரி­டத்­தி­லான கேள்வி நேரத்தின் போது தமிழ்த் தேசிய கூட்­ட­மைப்பின் வன்னி மாவட்ட பாரா­ளு­மன்ற உறுப்­பினர் சிவ­சக்தி ஆனந்தன் எழுப்­பிய கேள்­விக்கு பதி­ல­ளிக்­கை­யி­லேயே அவர் மேற்­கண்­ட­வாறு குறிப்­பிட்டார்.

சிவ­சக்தி ஆனந்தன் தனது கேள்­வியில் குறிப்­பி­டு­கையில்: “இறுதி யுத்­தத்­தின்­போது குண்டு தாக்­கு­தல்கள், செல்­வீச்­சுகள், விமான குண்­டு­தாக்­கு­தல்­களால் உடலில் குண்­டுத்­து­கள்கள் புகுந்த நிலையில் மாண­வர்கள் உட்­பட பொது­மக்கள் பலர் வன்னி மாவட்டம் உட்­பட வடக்கு கிழக்கில் பல்­வேறு பிரச்­சி­னை­க­ளுக்கு முகங்­கொ­டுத்து வரு­கின்­றனர். குறிப்­பாக அவர்கள் குண்­டுத்­து­கள்­களில் இர­சா­யான தாக்­கத்­திற்கு இலக்­கா­வ­தோடு அத்­து­கல்­களை வெளி­யேற்­று­வ­தற்­கு­ரிய மருத்­துவ சிகிச்­சைகள் இன்­றியும் காணப்­ப­டு­கின்­றனர். அவர்­களின் எண்­ணிக்­கையை பிர­தமர் அறி­வாரா? அது தொடர்­பான எவ்­வி­த­மான நட­வ­டிக்­கை­களை தங்­க­ளு­டைய அர­சாங்கம் எடுத்­துள்­ளது? எனக் கேள்வி எழுப்­பினார்.
பிர­தமர் தனது பதிலில் மேலும் குறிப்­பிட்­டுள்­ள­தா­வது;

யுத்­தத்தின் போது பொது­மக்கள் பாரிய துன்­பங்­களை எதிர்­கொண்­டனர் என்­பதை நாம் அறிவோம். தற்­போது மத்­திய கிழக்கின் சிரியா போன்ற நாடு­களில் இரா­ணு­வத்­தி­ன­ருக்கும் பயங்­க­ர­வா­தி­க­ளுக்­கு­மி­டை­யி­லான யுத்­தத்தில் ஏற்­படும் விளை­வு­களை நாம் கண்­கூ­டாக பார்க்க முடி­கின்­றது. அதே­போன்று தான் இங்கும் இரா­ணு­வத்­தி­ன­ருக்கும் பயங்­க­ர­வா­தி­க­ளுக்கும் இடை­யி­லான யுத்­தத்தின் போது இரு தரப்­பி­னரும் பரஸ்­பர தாக்­கு­தல்­களை மேற்­கொண்­டார்கள். மோட்டார் குண்­டு­களை பயன்­ப­டுத்­தி­னார்கள். இதனால் சாதா­ரண மக்­க­ளுக்கு பாதிப்­புக்கள் ஏற்­பட்­டன என்­பதை ஏற்றுக் கொள்­கின்றோம்.

ஆனால் குண்டு தாக்­கு­தலால் பாதிக்­கப்­பட்­ட­வர்கள் தொடர்­பான உத்­தி­யோக பூர்­வ­மான அறிக்கை எமக்கு கிடைக்­க­வில்லை. அதே­போன்று குண்­டுத்­து­கள்­களின் இர­சா­யன தாக்­கங்­களில் ஏற்­பட்ட பாதிப்­பு­க­ளுக்கு முகங்­கொ­டுத்­த­வர்கள் தொடர்­பான உத்­தி­யோ­க­பூர்வ விப­ரங்­களும் கிடைக்­க­வில்லை. எனினும் அவ்­வாறு பாதிப்­புக்கு இலக்­கா­ன­வர்கள் நாட்டின் எந்த வைத்­தி­ய­சா­லை­யிலும் சிகிச்சை பெற்­றுக்­கொள்ள முடியும். அதே­நேரம் அவ்­வாறு பாதிக்­கப்­பட்­ட­வர்­க­ளுக்கு உடன் சிகிச்­சைகள் தேவைப்­ப­டு­மாயின் தாங்கள் அமைச்சர் சுவா­மி­நாதன் மற்றும் சுகா­தார அமைச்சர் ராஜி­த­சே­னா­ரட்­ன­வுடன் கலந்­தா­லோ­சித்து உத­வி­களைப் பெற்றுக் கொடுக்க முடியும். அவர்­க­ளுக்கு அது தொடர்­பாக தேவை­யான உத­வி­களை வழங்­கு­வ­தற்கு தயா­ரா­க­வி­ருக்­கின்றோம். அனை­வ­ருக்கும் உத­வி­க­ளையும் சிகிச்­சை­க­ளையும் வழங்­கு­வதில் எமது அர­சாங்கம் உறு­தி­யா­க­வுள்­ளது என்றார்.

இதன்­போது குண்­டு­து­கள்கள் உடலில் சுமந்த வண்ணம் சுமார் ஆயி­ரத்­திற்கும் மேற்­பட்ட மாண­வர்கள் காணப்­ப­டு­கின்­றார்கள். இதே­போன்று சிறு­வர்­களும் பொது­மக்­களும் காணப்­ப­டு­கின்­றனர். மேலும் பல­ரு­டைய உடம்­பி­லி­ருந்து குண்­டுத்­து­கள்­களை அகற்­று­வ­தற்கு விசேட மருத்­துவச் சிகிச்சை அவ­சி­ய­மா­ன­தா­க­வுள்­ளது. விசேட நிபு­ணத்­துவம் வாய்ந்த மருத்­து­வர்­களின் ஆலோ­ச­னைகள் அவ­சி­ய­மா­க­வுள்­ளன. இந்­தியா போன்ற வெளி­நா­டு­களில் சிகிச்­சை­பெற வேண்­டிய தேவையும் காணப்­ப­டு­கின்­றது. பொரு­ளா­தார நிதி­யாக பல­வீ­ன­மான நிலையில் குண்டு துகள்­க­ளுடன் அனை­வரும் காணப்­ப­டு­வதால் அவர்­க­ளுக்கு சிகிச்சை பெறு­வதில் பாரிய பிரச்­சி­னைகள் காணப்­ப­டு­கின்­றன.

அண்­மையில் பல்­க­லைக்­க­ழக மாணவன் ஒருவன் உற­வி­னரால் நண்­பர்­களின் உத­வி­யுடன் சென்­னைக்குச் சென்று தனது உடலில் காணப்­பட்ட 6 குண்டுத் துகள்­களை வெளி­யேற்­றி­யி­ருந்தார். இவ்­வாறு மாண­வர்கள் பலர் காணப்­ப­டு­கின்ற போதும் அவர்­களில் பெரு­ம­ள­வானோர் தந்­தையை அல்­லது தாயை இழந்­த­வர்­க­ளாக, வறுமைக் கோட்­டிற்கு உட்­பட்­ட­வர்­க­ளாக இருப்­பதால் பல இன்­னல்­க­ளுக்கு முகம் கொடுக்­கின்­றனர். எனவே அது குறித்தும் அர­சாங்கம் கவ­னத்திற் கொள்­வது அவ­சியம் என பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்­க­வி­டத்தில் சிவ­சக்தி ஆனந்தன் எம்.பி கோரிக்கை விடுத்தார்.

இதன் போது கருத்­து­ரைத்த பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க எம்­மி­டத்தில் உத்தியோக பூர்வமான அறிக்கைகள் எதுவும் கையளிக்கப்படவில்லை. தாங்கள் பாதிக்கப்பட்டவர்கள் குறித்து அறிக்கையை என்னிடத்தில் சமர்ப்பியுங்கள். நான் ஜனாதிபதியுடன் கலந்துரையாடி விசேட செயற்றிட்டமொன்றை முன்னெடுப்பதற்கு நடவடிக்கைகளை மேற்கொள்கின்றேன்.

அதேநேரம் மருத்துவ சிகிச்சைகளை உள்நாட்டில் பெற்றுக்கொடுப்பதற்கோ அல்லது இந்தியா போன்ற நாடுகளிலிருந்து மருத்துவ நிபுணர்களை வரவழைத்து சிகிச்சைகளைப் பெற்றுக் கொடுப்பதற்கோ நாம் தயாராகவிருக்கின்றோம். அரசாங்கம் என்ற வகையில் போரினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவுவது எமது கடமையாகும் என்றார்.
R-06