செய்திகள்

மைத்திரி – மோடி இணைந்து திறந்து வைக்கவுள்ள துரையப்பா மைதானம்

இந்திய உதவியுடன் நவீனமயப்படுத்தப்பட்டுள்ள யாழ்பாணம் துரையப்பா விளையாட்டு மைதானத்தை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும் மற்றும் இந்திய பிரதமர் நரேந்திர மேடியும் இணைந்து திறந்துவைக்கவுள்ளனர்.
எதிர்வரும் 18ஆம் திகதி இந்த மைதானத்தை திறந்துவைக்க ஏற்பாடுகள் இடம்பெற்றுவருவதுடன் அதன்போது ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கொழும்பிலிருந்து சென்று நிகழ்வில் கலந்துக்கொள்ளவுள்ளதுடன் இந்திய பிரதமர் இணையம் மூலம் இந்தியாவிலிருந்து கலந்துக்கொள்ளவுள்ளார்.
இதன்போது இருதரப்பு வீடியோ மூலமான கலந்துரையாடலொன்றும் நடைபெறவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.